எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, பட்டய படிப்பை முடித்து, ஓர் இளைஞனாய் தன்னை சமூக பயணத்தில் இணைத்து கொண்டவர். இன்றைய இளைஞர்கள் அரசியல் சமூக பயணத்தில் இணைவதற்கு பெரும் முன்னுதாரணமாக விளங்கியவர். கல்லூரி படிப்பை முடித்தவுடன், பயமறியா சூரியனாய் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அன்று முதல் இன்று வரை மக்கள் பணியில் தொய்வில்லை. எடுத்து கொண்ட கொள்கையில் சமரசமில்லை.